திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சம்பா தாளடி அறுவடை பணிகள் முடிவுற்று, தற்போது பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுவரும் நிலையில், தற்போது உரத் தட்டுப்பாடு நிலவி வருவதால் விவசாயிகள் பருத்திக்கு உரம் வைக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், வெளியிலிருந்து உரங்களை கொள்முதல் செய்ய முடியவில்லை என கடை உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.
இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் உரிய நேரத்தில் இடுபொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'விவசாயிகளின் கடன்வாங்கும் தகுதி மேம்படுமா?'