நாகை மக்களவை உறுப்பினர் செல்வராசு தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்தக்கூடாது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும். விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை தமிழ்நாட்டில் இருந்து அப்புறப்படுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நகர காவல் துறையினர் கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துவைத்தனர்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு பேரழிவு ஏற்படும் அபாயம் - முதலமைச்சருக்கு பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை