ETV Bharat / state

முத்துப்பேட்டை தர்காவில் 718ஆம் ஆண்டு கந்தூரி விழா!

திருவாரூர்: உலக பிரசித்திப்பெற்ற முத்துப்பேட்டை தர்காவில் இன்று நடைபெற்ற 718ஆம் ஆண்டு பெரிய கந்தூரி விழாவில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

author img

By

Published : Jan 6, 2020, 8:41 AM IST

முத்துப்பேட்டை தர்காவில் நடந்த கந்தூரி விழா
முத்துப்பேட்டை தர்காவில் நடந்த கந்தூரி விழா

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டையில் பிரசித்திப்பெற்ற தர்காவின் 718ஆம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இஸ்லாமியர்களின் புனிதத்தலமான முத்துப்பேட்டை தர்கா பெரிய கந்தூரி விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று இரவு புனித சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு புனித ரவுலா சரீபுக்கு சந்தனம் பூசப்பட்டு சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

முத்துப்பேட்டை தர்காவில் நடந்த கந்தூரி விழா

தொழுகையின்போது உலக நன்மைக்காகவும் மழைபெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் தொழுகை நடைபெற்றது. சந்தனக்கூடு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தர்கா பகுதியில் வலம்வந்தது. சந்தனக்கூடு விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இவ்விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஏர்வாடி தர்காவில் 845ஆவது ஆண்டு சந்தனக்கூடு விழா கோலாகலம்

Intro:Body:உலக பிரத்திப்பெற்ற முத்துப்பேட்டை தர்காவில் இன்று நடைபெற்ற 718ஆம் ஆண்டு பெரிய கந்தூரி விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டையில் பிரசித்தி பெற்ற தர்காவின் 718 ஆம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 27ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மிகப்பழமையானதும் இஸ்லாமியர்களின் புனித தலமான முத்துப்பேட்டை தர்கா பெரிய கந்தூரி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் இன்று இரவு புனித சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு புனித ரவுலா சரீபுக்கு சந்தனம் பூசப்பட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகையின்போது உலக நன்மைக்காகவும் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் தொழுகை நடைபெற்றது.
சந்தனகூடு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தர்கா பகுதியில் வலம்வந்தது.சந்தனக்கூடு விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்
பஙகேற்றனர்.

இவ்விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்( 06.01.20 ) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.