ETV Bharat / state

மன்னார்குடியில் அதிக வட்டி தருவதாக ரூ.1.5 கோடி மோசடி - தம்பதி மாயம்! - 1.5 crore cheating in mannarkudi

திருவாரூர்: மன்னார்குடியில் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தைக் கூறி 21 பெண்களிடம் ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் கணவருடன் தலைமறைவானதால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

மன்னார்குடியில் பண மோசடி
author img

By

Published : Aug 17, 2019, 11:39 AM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த மேகலாதேவியும் (35), அவரது கணவர் ஜெயபிரகாஷும் (45) துணி வியாபாரம் செய்துவந்தனர். மேகலாதேவி தன்னிடம் நெருங்கிப் பழகிய பெண்களிடம் சில மாதங்களுக்கு முன்பு புதிதாக துணிக்கடை வைத்து அதில் அனைவரும் பங்குதாரராக செயல்படுவோம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, தானும் தனது கணவரும் சேர்ந்து ஃபைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டுவருவதாகவும் தன்னிடம் பணம் கொடுத்தால் அதற்கு அதிகளவில் வட்டி கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய கவிதா, ஜெயக்கொடி, தனலெட்சுமி, ஆனந்தி, அருக்காணி உள்ளிட்ட 21 பெண்கள் இரண்டு லட்சம் முதல் 15 லட்சம் வரை மொத்தம் ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் வரை மேகலாதேவியிடம் கொடுத்துள்ளனர்.

ஒருவரிடம் பணம் பெற்ற விஷயம் அடுத்தவருக்கு தொியாமல் மேகலாதேவி பார்த்துக் கொண்டுள்ளார். ஆரம்பத்தில் வட்டிப் பணம் கொடுத்த மேகலாதேவி பல மாதங்களாக வட்டிப் பணம் கொடுக்காததால் சந்தேகமடைந்த பணம் கொடுத்தவர்கள் தங்களுடைய வட்டியையும் அசல் பணத்தையும் உடனே திருப்பிக்கொடுக்குமாறு அவருக்கு நெருக்கடி கொடுத்தனர். அதனால் கடந்த ஜூலை 18ஆம் தேதி மேகலாதேவி விஷம் அருந்தியதாகத் தெரிகிறது.

இதனையறிந்த பணம் கொடுத்த பெண்கள் மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மேகலாதேவியை சந்தித்து தங்களது பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர். இதன் காரணமாக, ஜூலை 20ஆம் தேதி இரவே மருத்துவரின் அனுமதியின்றி மேகலாதேவி கணவருடன் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, பணம் கொடுத்த பெண்களில் ஒரு பிரிவினர் மன்னார்குடி காவல் நிலையத்திலும் மற்றொரு பிரிவினர் திருவாரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் மேகலாதேவி, அவரது கணவர் மீது மோசடி புகார் கொடுத்தனர்.

புகார் கொடுத்து ஒரு மாதம் கடந்த நிலையிலும் தங்களது புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வருத்தம் தெரிவித்ததையடுத்து, மன்னார்குடி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவின்பேரில் தேவங்குடி காவல் உதவி ஆய்வாளர் முருகானந்தம் தலைமையிலான தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:மன்னார்குடியில் 21 பெண்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தைகூறி ரூ1.5 கோடி மோசடி செய்த பெண் கணவருடன் தலை மறைவு பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பூக்கொல்லை தெருவை சேர்ந்தவர் மேகலாதேவி (35). இவரின் கணவர் ஜெயபிரகாஷ் (45). இருவரும் துணி வியாபாரம் செய்து வந்தாக கூறப்படுகிறது. மேகலா தேவி விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர். மன்னார்குடி பகுதிகளில் உள்ள நெடுவாக்கோட்டை, பரவாக்கோட்டை, மேலவாசல், அஷேசம், பூக்கொல்லை ரோடு, கீழப்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேகலா தேவி வீடுவீடாக துணி வியாபரம் செய்த போது பல குடும்ப பெண்களுடன் நெருங்கி பழகி உள்ளார்.

இந்நிலையில் மேகலா தேவி தன்னிடம் நெருங்கி பழகிய பெண்களிடம் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு எனது வீட்டிற்கு அருகாமையில் சில பெண்களிடம் பங்குதாரராக புதிதாக துணிகடை வைத்து செயல்படுவோம் எனவும், தானும் தனது கணவரும் சேர்ந்து பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் என்னிடம் நீங்கள் பணம் கொடுத்தால் அதற்கு அதிகளவில் வட்டி கிடைக்கும் எனவும், மாதா மாதம் குறித்த நாளில் கொடுக்கும் பணத்திற்கு உரிய வட்டி கொடுக்கப்படும் என ஆசைவார்த்தை கூறியுள்ளார் .

இதனை நம்பிய மன்னார்குடி அசேஷம் பகுதியை சேர்ந்த கவிதா, மன்னார்குடி நகர பகுதிகளை சேர்ந்த ஜெயக்கொடி, தனலெட்சுமி, ஆனந்தி , அருக்காணி உள்ளிட்ட 21 பெண்கள் தலா ரூ 2 லட்சம் முதல் ரூ 15 லட்சம் வரை மொத்தம் ரூ 1.5 கோடி வரை கொடுத்தாக கூறப்படுகிறது.
ஒருவரிடம் பணம் பெற்ற விஷயம் அடுத்த பெண்களுக்கு தொியாமல் மேகலாதேவி பார்த்து கொண்டுள்ளார். ஆரம்பத்தில் ஒரு சிலருக்கு மட்டும் வட்டி பணம் கொடுத்த மேகலாதேவி பலருக்கு பல மாதங்களாக வட்டி பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த பல பெண்கள் வட்டி மற்றும் தாங்கள் கொடுத்த பணத்தை உடன் கொடுக்குமாறு மேகலாதேவிக்கு நெருக்கடி கொடுத்தனர்.
இந்நிலையில் 18-ந்தேதி மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் மேகாலாதேவி விஷம் அருந்தி விட்டதாக கணவர் ஜெயபிரகாஷ் கவிதா என்பவருக்கு தகவல் தொிவித்துள்ளார் . தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்ற கவிதா அங்கு மேகலாதேவியை நலம் விசாாித்து பிரச்சனைக்கான காரணத்தை கேட்டபோது வீட்டில் மாமனார் வீட்டை விற்க கூடாது என சண்டை போட்டதால் பாத்ரூம் கிளினரை குடிவித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

பின்பு நீங்கள் வாங்கிய பணத்தை திரும்பி கொடுத்து விடுங்கள், நான்வாங்கி கொடுத்த இடத்தில் அதிகவட்டி கேட்கிறார்கள் என்னால் கட்டமுடியவில்லை என கவிதா கூறியுள்ளார்.
அதன்பிறகு மேகலாதேவிக்கு பணம் கொடுத்த 20 பேரும் மருத்துவமனையில் சென்று விரைவில் பணத்தை திருப்பி கொடுத்துவிடும்மாறு அனைவரும் கேட்டுள்ளனர்.
அனைவருக்கும் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றும் நோக்கத்தோடு கடந்த 20ம் தேதி இரவே மருத்துவமனையில் மருத்துவர் அனுமதி இல்லாமல் மேகலாதேவியும் கணவருடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு பாதிக்கபட்ட அனைவரும் மேகலாதேவியின் செல்போனை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யபட்டிந்தது. எனவே இதனையறிந்த பணம் கொடுத்த பெண்கள் மேகலாதேவி வீட்டிற்கு சென்று அங்கிருந்த அவரின் மாமனார் ராஜகோபால் என்பவரிடம் மேகலாதேவி எங்கு சென்றார் என கேட்டதற்கு இதுகுறித்து தனக்கு சம்பந்தம் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்களில் ஒரு பிரிவினர் மன்னார்குடி காவல் நிலையத்திலும், மற்றொரு பிரிவினர் திருவாரூர் எஸ்பி அலுவலகத்திலும் மேகலாதேவி, அவரின் கணவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் மீது மோசடி புகார் கொடுத்தனர்.

இந்நிலையில் மேகலாதேவியின் மாமனார் ராஜகோபால் மன்னார்குடி போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது மகன் ஜெய்பிரகாஷும், மருமகள் மேகலாதேவியும் காணவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் விசாரணை நடத்தினார். அதனையறிந்த பாதிக்கப்பட்ட பெண்கள் 21 பேர்களும் மன்னார்குடி காவல் நிலையத்திற்கு வந்து மேகலாதேவி, ஜெயபிரகாஷ், ராஜகோபால் ஆகிய மூவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினர்.
இந்நிலையில் புகார் கொடுத்த 1 மாதங்கள் கடந்தும் தங்களுக்கு பணம் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் தாங்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்தி தலைமறைவான மேகலாதேவி மற்றும் அவரின் கணவரான ஜெயபிரகாஷ் ஆகியோரை உடன் பிடிக்க மன்னார்குடி டிஎஸ்பி கார்த்திக் உத்தரவின் பேரில் தேவங்குடி எஸ்ஐ முருகானந்தம் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப் பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி 21 பெண்களிடம் சுமார் ரூ 1.5கோடி வரை மோசடி செய்த பெண் தனது கணவருடன் தலைமறைவான சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.