திருவாரூர் அருகே உள்ள மகிழஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலித்தொழிலாளி செந்தில்குமார். இவருக்கு மௌனிகா (17) என்ற மகள் உள்ளார். இவர் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.
இவர் அதே பகுதியில் வசிக்கும் தனது பாட்டிக்கு துணையாக அவரது வீட்டில் உறங்கச் செல்வார். இதேபோல், நேற்றிரவு மாணவி அவரது வீட்டில் உணவருந்திவிட்டு, பாட்டி வீட்டில் உறங்கச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், இன்று காலை பாட்டி வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளியில் மாணவி உடலில் காயங்களுடன், சடலமாக கிடக்கிறார் என்ற செய்தியைக் கேட்ட செந்தில்குமார் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மாணவி அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மௌனிகா பள்ளியில் படிக்கும்போது குறும்படங்களில் நடித்து, அதை யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவன்!