ETV Bharat / state

ஜெ.வின் 73ஆவது பிறந்தநாள்: 140 இணையருக்கு இலவச திருமணம் நடத்திவைத்த அமைச்சர்கள்! - 140 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

திருவாரூர்: ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 140 இணையருக்கு இலவச திருமணத்தை அமைச்சர்கள் பங்கேற்று நடத்திவைத்தனர்.

AIADMK ministers
அதிமுக அமைச்சர்கள்
author img

By

Published : Feb 23, 2021, 10:06 AM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் ஏற்பாட்டில் 140 ஏழை-எளிய இணையருக்கு இலவச திருமணம் நடத்திவைக்கப்பட்டது.

இத்திருமண விழாவில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்திலிங்கம், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், கே.பி. அன்பழகன், ஆர்.பி. உதயகுமார், விஜயபாஸ்கர், வளர்மதி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்று திருமணங்களை நடத்திவைத்தனர்.

திருமணம் செய்துகொண்ட புதுமண தம்பதிக்கு மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள 28 சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் புதுமண தம்பதிகளின் உறவினர்கள் என ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து அமைச்சர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, பதிலளிக்காமல் அனைத்து அமைச்சர்களும் சென்றனர்.

இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.