ETV Bharat / state

'10 வருஷமா இருந்தீங்களே நன்னிலத்துல அதச் செஞ்சீங்களா காமராஜ்?'

கடந்த 10 ஆண்டுகளாக நன்னிலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் உணவுத் துறை அமைச்சராக இருந்த காமராஜ் நன்னிலத்தில் ஒரு நவீன அரிசி ஆலையை அமைத்திருக்கலாம்; ஆனால் அமைக்கவில்லை என அமைச்சர் அர. சக்கரபாணி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அர. சக்கரபாணி
அமைச்சர் அர. சக்கரபாணி
author img

By

Published : Jan 20, 2022, 10:02 AM IST

திருவாரூர்: மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுடன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்து காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "கடந்தாண்டு சம்பா பருவத்தில் நான்கு மாவட்டங்களிலும் சுமார் 14 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்செய்யப்பட்டது. இந்தாண்டு அதைவிட கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு மூட்டைக்கு மும்முடங்கு உயர்த்திய ஸ்டாலின்

டெல்டா மாவட்டங்களில் சுமார் 1400 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற எட்டு மாத காலத்திற்குள் விவசாயிகள் நலன் காக்கின்ற வகையில் பல்வேறு திட்டங்களைத் தீட்டி தொடர்ந்து செயல்படுத்திவருகிறார். அதன்படி விளைச்சலைக் கண்டது.

ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்திற்கு வருகைதந்த பொழுது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை நேரடியாக ஆய்வுசெய்து அங்குள்ள பணியாளர்கள், பட்டியல் எழுத்தர், எழுத்தர்கள், காவலர்கள், விவசாயிகள் என அனைவரிடம் குறை, நிறைகளைக் கேட்டறிந்து அதற்கான தீர்வுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதனடிப்படையில், விவசாயிகள் எந்தவித பாதிப்பும் அடையக் கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு ஸ்டாலின், அரசுக்கு நிதி நெருக்கடி இருக்கும் நிலையிலும் பணியாளர்களுக்கு ஒரு மூட்டைக்கு ரூ.10 என பழைய விலையினை விட மும்மடங்கு உயர்த்தி வழங்கியுள்ளார்.

கண்காணிப்புக் குழு

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்காக மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்), வேளாண்மை இணை இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர், 2 விவசாய சங்கப் பிரதிநிதிகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத் தலைவர் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விவசாய சங்கப் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.

அமைச்சர் அர. சக்கரபாணி
அமைச்சர் அர. சக்கரபாணி

இந்தாண்டு திருவாரூர் மாவட்டத்தில் 450 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற நெல்லினை கொள்முதல் செய்வதற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலேயே விவசாயிகள் தங்கள் நெல்லினைப் பதிவு செய்துகொள்ள கூடிய வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

இதற்காக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உரிய பயிற்சியும் வழங்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து வரும் நெல் மூட்டைகளைக் கண்காணிப்பதற்கு மாவட்ட எல்லையோரங்களில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஒரு நாளாவது பார்வையிட்டீர்களா காமராஜ்?

நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும். கடந்த 10 ஆண்டுகளாக நன்னிலம் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகவும், உணவுத் துறை அமைச்சராக இருந்த காமராஜ் ஒரு நவீன அரிசி ஆலையை அமைத்திருக்கலாம்; ஆனால் அமைக்கவில்லை" என்றார்.

மேலும் மன்னார்குடி அருகில் சுந்தரக்கோட்டையில் உள்ள நவீன அரசி ஆலையை ஒரு நாளாவது பார்வையிட்டாரா? என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.