திருவாரூர் மாவட்டம், பாமணியில் நரிக்குறவர்கள் குடியிருப்புப் பகுதியில் உள்ளவர்களுக்கு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 15 நாள்கள் கடந்துள்ளதால் அத்தியாவசிய பொருள்கள் விநியோகத்தில் சிரமங்கள் உள்ளன. பொருட்களை பதுக்குவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா தொற்று பாதித்த ஒரு லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பப்படவில்லை என திமுக நிலைக்குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்திருப்பது உண்மைக்கு புறம்பானது. திருவாரூர் மாவட்டத்தில் கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் உள்பட 19 ஆயிரம் குடும்பங்களுக்கு இருமல், காய்ச்சல் உள்ளதா என தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டுவருகிறது” என்றார்.
இதையும் படிங்க: திருவாரூரில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு