ETV Bharat / state

ஸ்டாலினுக்கு கை பட்டா குத்தம்...கால் பட்டா குத்தம் - அமைச்சர் காமராஜ் காட்டம் - ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த காமராஜ்

திருவாரூர்: வேண்டாத பொண்டாட்டிக்கு கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் என்பதுபோல திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நாங்கள் அவருக்கு வேண்டாதவர்களாக இருக்கிறோம் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

minister kamaraj
author img

By

Published : Nov 15, 2019, 3:29 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு பெறும் நிகழ்ச்சி அதிமுக மாவட்ட செயலாளரும் உணவு துறை அமைச்சருமான காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு விண்ணப்ப படிவத்தினை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் காமராஜ், தமிழ்நாடு துணைத் தேர்தல் செயலாளர் மாற்றப்பட்டது தொடர்பாக ஸ்டாலின் கூறிய கருத்துக்கு, "வேண்டாத பொண்டாட்டிக்கு கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் என்பதுபோல நாங்கள் அவருக்கு வேண்டாதவர்களாக இருக்கிறோம்" என்ற வகையில் எதுகை மோனையில் பதிலளித்தார்.

விருப்பமனுவை வழங்கிய அமைச்சர்
விருப்பமனுவை வழங்கிய அமைச்சர்

தொடர்ந்து பேசுகையில், "அதிமுக ஆட்சியில் இருப்பதை ஒரு நாள்கூட அவர் விரும்புவது கிடையாது. ஆக்கப்பூர்வமான கருத்துகளை எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் சொல்லுவதும் கிடையாது. எப்படியாவது அதிமுகவை தமிழ்நாட்டிலிருந்து அழித்துவிட வேண்டும் என்பது போலத்தான் அவருடைய செயல்பாடுகள் இருக்கிறது. உள்ளாட்ச்சி தேர்தலை தள்ளி போடுவதற்கான அவசியம் அதிமுகவிற்கு இல்லை, தேர்தலை சந்திக்க அதிமுக 100 விழுக்காடு தயாராகவுள்ளது.

ஸ்டாலினுக்கு கால் பட்ட குத்தம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேசுவதற்கு கமல் ஹாசனுக்கு எந்தவித அடிப்படை தகுதியும் கிடையாது. எதை வேண்டுமானாலும் பேசலாம் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்பது வரலாற்றில் மிகப்பெரிய குற்றமாகிவிடும் அதையெல்லாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்" என எச்சரித்தார்.

Intro:

Body:தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து விமர்சித்துப் பேசுவதற்கு கமலஹாசனுக்கு எந்தவித அடிப்படை தகுதியும் கிடையாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேட்டி.

திருவாரூரில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் விருப்பமனு பெறும் நிகழ்ச்சி அதிமுக மாவட்ட செயலாளரும் உணவு துறை அமைச்சருமான காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு விண்ணப்ப படிவம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ்,

நடந்து முடிந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல்களில் அதிமுக கூட்டணி கட்சிகள் சேர்ந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. அதை கூட்டணியோடு தான் அதிமுக வருகின்ற உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட உள்ளது.

தமிழக துணை தேர்தல் செயலாளர் மாற்றப்பட்டது தொடர்பாக ஸ்டாலின் கூறிய கருத்துக்கு,
வேண்டாத பொண்டாட்டிக்கு கை பட்டா குத்தம் கால் பட்டா குத்தம் என்பதுபோல நாங்கள் அவருக்கு வேண்டாதவர்களாக இருக்கிறோம். அதிமுக ஆட்சி இருப்பதை ஒரு நாள்கூட அவர் விரும்புவது கிடையாது. ஆக்கப்பூர்வமான கருத்துக்களை எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் சொல்லுவதும் கிடையாது. எப்படியாவது அதிமுகவை தமிழகத்திலிருந்து அழித்துவிட வேண்டும் என்பது போலத்தான் அவருடைய செயல்பாடுகள் அமைந்து இருக்கிறது.

மேலும் எதிர்கட்சி தலைவர்கள் கூறுவது போல
உள்ளாட்ச்சி தேர்தலை தள்ளி போடுவதற்கான அவசியம் அதிமுக-விற்கு இல்லை, தேர்தலை சந்திக்க அதிமுக 100% தயாராக உள்ளது. கடந்த தேர்தல் தள்ளி வைத்தற்க்கு காரணம் திமுக தான், உள்ளாட்சித் தேர்தலை தள்ளி போட வேண்டிய அவசியம் தங்களுக்கு கிடையாது.

மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேசுவதற்கு கமலஹாசனுக்கு எந்தவித அடிப்படை தகுதியும் கிடையாது. ஒரு கட்சியை தொடங்கிய 2, 3 சதவீத வாக்குகளை பெற்று அதை வைத்துக்கொண்டு ஆடுவது என்பது ஒரு தவறான முன்னுதாரணம். எதை வேண்டுமானாலும் பேசலாம் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்பது வரலாற்றில் மிகப்பெரிய குற்றம் ஆகிவிடும் அதையெல்லாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.