திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கடை வீதியில் அமைக்கப்பட்ட கிருமி நாசினி சுரங்க பாதையை உணவுத்து றை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, நீடாமங்கலம், கொட்டையூர் அருகே கிரும் நாசினி தெளிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், "முதலமைச்சரின் கோரிக்கைகள், அறிக்கைகள், செய்திகளை கேட்டு மக்கள் படிப்படியாக கரோனாவிற்கு எதிராக ஒத்துழைப்பை வழங்கிவருவது நிம்மதி அளிக்கிறது. சுகாதாராத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, உள்ளாட்சித் துறை, வருவாய் துறை, காவல் துறையினரின் அளப்பரிய செயலை பாராட்டுகிறேன்.
திருவாரூர் மாவட்டத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்ட 12 பேரும் சாதரண நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தீவிர நிலைக்கு செல்லவில்லை. கரோனா நிவாரணத் தொகையாக நேற்று வரை 1 கோடியே 86 லட்சம் பேருக்கு டோக்கன் மற்றும் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் 10 லட்சத்து 14 ஆயிரம் சர்க்கரை அட்டைதாரர்களில் 4 லட்சத்து 14 ஆயிரம் சர்க்கரை அட்டைதாரர்கள் அரிசி அட்டைகளாக மாற்றியுள்ளனர்.
5 லட்சத்து 70 ஆயிரம் சர்க்கரை அட்டைதாரர்கள் மாற்றாமல் உள்ளனர். இவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க இயலாது. இதுவரை தமிழ்நாட்டில் வசிக்கும் 18 ஆயிரத்து 884 இலங்கை அகதிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: மது கிடைக்காத விரக்தியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!