திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள வாட்டார் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாசாமி. இவரது மனைவி மனோமணி (70) சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மனநலம் பாதிக்கப்பட்டவர்.
கடந்த 28 நாள்களுக்கு மேலாக மனோமணி காணவில்லை என அவரது உறவினர் பல இடங்களில் தேடிவந்த நிலையில், நேற்று (பிப். 2) அப்பகுதி பெருமாள் கோயில் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தவர் கோயில் குளத்திற்கு மாடுகளை ஓட்டிச் சென்றபோது குளத்தில் ஒரு பெண் சடலம் மிதந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
![கோட்டூர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvr-01-girl-corps-police-recovery-vis-script-tn10029_03022021082231_0302f_1612320751_229.jpg)