தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒருபகுதியாக இந்த மாதத்தில் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்தவிதமான தளர்வுகளுமின்றி, தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஜூலை12) இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை காரணமாக முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் அவசர மருத்துவ சிகிச்சைக்கும், அத்தியாவசியத் தேவைக்கும் மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் திருவாரூர் கடை வீதி, சன்னநல்லூர், பேரளம், கொல்லுமாங்குடி, கடைவீதிகள் எந்த நேரமும் பரபரப்பாக காணப்படும் வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. அரசின் அறிவுரையை ஏற்று கடைகள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டதால், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். இதனால், அனைத்து சாலைகளிலும் வாகனப் போக்குவரத்து இன்றியும் காணப்பட்டது.