ஆண்டுதோறும் மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
இந்நிலையில் நேற்றைய தினமான சிவராத்திரி நாளில் அனைத்து சிவாலயங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக, திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பரதநாட்டிய கலைஞர்கள் கலந்துகொண்டு பரதநாட்டியம், மோகினி ஆட்டம், சிவ தாண்டவம், சிவாலய நாடகங்களை அரங்கேற்றினர்.
மேலும் இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியானது தொடர்ந்து இன்னும் இரண்டு நாள்கள் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டுகளித்தனர்.
இதையும் படிங்க: