திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மோட்டார் வாகன அலுவலகத்தின் முன்பு கனரக மோட்டார் வாகன சட்டங்களில் பல்வேறு குளறுபடிகளை கொண்டு வந்த தமிழ்நாடு அரசை கண்டித்து திருத்துறைபூண்டி லாரி உரிமையாளர் சங்க தலைவர் ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு, லாரி வேகக்கட்டுப்பாட்டு கருவியில் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும், லாரிகளில் புதிய ஒளிரும் பட்டை பொருத்துவதை ரத்து செய்ய வேண்டும், லாரிகளில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்துவது ரத்து செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் போக்கை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மோட்டார் வாகன அலுவலகத்தில் ஆய்வாளரிடம் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்கள்.