திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் 600 லாரிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், இவை அனைத்தும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நெல் மூட்டைகளை ஏற்றிச்சென்று வருகின்றன.
அதற்கு வாடகையாக 8 விழுக்காடு மட்டும் வழங்கப்படுகின்றது. திருவாரூர், மன்னார்குடி, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள லாரிகளுக்கு 11 விழுக்காடு வழங்கப்படுகின்றது.
வேலை நிறுத்தம்
ஆனால், திருத்துறைப்பூண்டி பகுதியுள்ள லாரிகளுக்கு ஒப்பந்தாரர் வாடகையை உயர்த்தி தரவில்லை. அதனால் லாரிகள் உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நெல் மூட்டைகள் தேக்கம்
இதனால் திருத்துறைப்பூண்டியைச் சுற்றியுள்ள 69 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. மேலும், அடிக்கடி மழை பெய்து வருவதால் நெல் மூட்டைகள் பாழாகிவிடும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் உடனடியாக வாடகையை உயர்த்தி தரவேண்டும் என்று லாரி உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: எதற்கும் துணிந்தவர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!