ETV Bharat / state

திருவாரூரில் 13 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பு

திருவாரூர்: 13 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

lockdown violation police return peoples

author img

By

Published : Aug 23, 2020, 4:20 PM IST

தமிழ்நாடு முழுவதும் இன்று (ஆக.23) முழு பொது ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, திருவாரூர் மாவட்டம் காணுர், வடுவூர், கோவில்வெண்ணி உள்ளிட்ட இடங்களில் காவல் துறையினர் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொது முழு ஊரடங்கை மீறி வேன், இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களின் மூலமாக வந்தவர்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி, எச்சரித்து திருப்பி அனுப்பி வருகின்றனர். குறிப்பாக, நாகை மாவட்டத்திலிருந்து திருமண நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களைத் தடுத்து நிறுத்தியதால், அவர்கள் வேனிலிருந்து இறங்கி நடந்து சென்றனர்.

மேலும் அத்தியாவசியத் தேவைகளுக்குச் செல்பவர்களை மட்டுமே காவல் துறையினர் அனுமதித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.