ETV Bharat / state

லலிதா ஜுவல்லரி கொள்ளையர்களைத் துரத்திப் பிடித்த போலீஸ்: வெளியான சிசிடிவி வீடியோ!

திருவாரூர்: திருச்சி லலிதா ஜீவல்லரியில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தப்பி செல்வதும், காவல் உதவி ஆய்வாளர் பாரத நேரு அவர்களைத் துரத்திச் செல்லும் சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

cctv video
author img

By

Published : Oct 5, 2019, 1:50 PM IST

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரியின் பின்புற சுவற்றைத் துளையிட்டு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையர்கள் திருடிச்சென்ற சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இரவு நேரத்தில் நகைக் கடையின் பின்புற சுவற்றைத் துளையிட்டு, உள்ளே புகுந்த கொள்ளையர்கள், 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை அள்ளிச் சென்றனர். கொள்ளையர்களை கண்டுபிடிக்க திருச்சி காவல்துறை சார்பில் ஏழு தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவந்தது.

வெளியான சிசிடிவி காட்சி

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் விளமல் அருகே காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன் என்பவர் பிடிபட்டார். அதுவே, இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக அமைந்தது. இதற்கிடையே, காவல் துறையினர் கொள்ளையர்கள் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தசொன்னபோது தப்பியோடிய மணிகண்டன், சுரேஷ் ஆகிய இருவரையும் திருவாரூர் நகர காவல் உதவி ஆய்வாளர் பாரத நேரு துரத்திச்சென்று பிடித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும், முக்கியமான கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை நெருங்குவதற்கு வழிவகுத்த உதவி ஆய்வாளர் பாரத நேருவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்துவருவது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:திருச்சி நகைகடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்பி செல்வதும் உதவி காவல் ஆய்வாளர் துரத்தி செல்லும் CCTV காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரி கடையின் பின்புற சுவரை துளையிட்டு கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.

திருச்சி காவல்துறை சார்பில் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில் திருவாரூரில் நடைபெற்ற வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் காவலர்கள் வாகன தணிக்கையின் போது கொள்ளையர்கள் மணிகண்டன், சுரேஷ் என்பவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் சென்ற காட்சிகளும், அதனை தொடர்ந்து திருவாரூர் நகர உதவி காவல் ஆய்வாளர் பாரத நேரு துரத்தி சென்ற பிடித்த CCTV காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

இதில் மணிகண்டன் என்பவர் பிடிபட்ட நிலையில், சுரேஷ் என்பவர் தப்பி சென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.