ETV Bharat / state

இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள் - அச்சத்தில் வாழும் மக்கள் - latest thiruvarur news

திருவாரூர்: நன்னிலம் அருகே உள்ள கந்தன்குடி கிராமத்தில் உள்ள தொகுப்பு வீடுகள் இடிந்துவிழும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருவாரூர்
திருவாரூர்
author img

By

Published : Dec 11, 2020, 4:59 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கந்தன்குடி கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 35-க்கும் மேற்பட்ட கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது.

இந்த கான்கிரீட் வீடுகள் அனைத்தும் தற்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையில் வீடுகளின் மேற்கூரைகள் அனைத்தும் கடும் சேதமடைந்து, கான்கிரீட் மேற்கூரைகளில் விரிசல் விட்டு காரைகளும், கம்பிகளும் வெளியில் தெரிகின்றன. இதனால் எப்போது வேண்டுமானாலும் கட்டடம் இடிந்து விழும் என்பதால், ஒவ்வொரு இரவையும் உயிர் பயத்துடன் கடந்து வருகின்றோம் என அங்கு வசிக்கும் பொதுமக்கள் வேதனையுடன் புலம்புகின்றனர்.

திருவாரூர்

இதுகுறித்து பலமுறை ஊராட்சி மன்றத் தலைவர், வட்டாட்சியர் என பலரிடம் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டினர். புதிய கான்கிரீட் வீடுகள் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்

இதையும் படிங்க:நீரில் மிதக்கும் வீடுகள்... பொதுமக்கள் ஆவடியில் அவதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.