திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள பெருகவாழ்ந்தான் கிராமத்திலுள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதியானது.
இந்நிலையில், பெருகவாழ்ந்தான் கிராம மக்கள் ஒன்றிணைந்து, அந்தக் கிராமத்தில் இரண்டு நாள்கள் கடைகளை அடைத்தனர். இருப்பினும், பெருகவாழ்ந்தான் கிராமத்திலுள்ள அரசு மதுபானக் கடை செயல்படுகிறது. அதனால் மதுப்பானக் கடைக்குச் செல்பவர்கள் மூலம் கரோனா தொற்று ஊர்மக்களுக்கு பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு மதுபானக் கடையை மூட வேண்டும் என கடையை முற்றுகையிட்டு அக்கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த அரசு அலுவலர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க...பாதுகாப்பு இல்லை; வால்வுடன் கூடிய என்-95 மாஸ்கை பயன்படுத்த வேண்டாம்!