ETV Bharat / state

காவல் நிலையம் அருகே மனைவியை கத்தியால் குத்திய  தொழிலாளி - திருவாரூரில் பரபரப்பு! - திருவாரூரில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்

திருவாரூர்: காவல் நிலையம் அருகே மனைவியை கத்தியால் குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்றவரை காவல் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மனைவியை கத்தியால் குத்திய கணவன்
author img

By

Published : Nov 18, 2019, 12:54 AM IST

திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வீரமணி - பத்மாவதி தம்பதி. இவர்களுக்கு ஆறுவயதில் பெண்பிள்ளை ஒன்று உள்ளது. இந்நிலையில் தம்பதிகளுக்கு இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் பத்மாவதி கோபித்துக் கொண்டு திருச்சிக்கு சென்றுள்ளார்.

இதையறியாத வீரமணி திருவாரூர் தாலுகா காவல்நிலையத்தில் மனைவியை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பத்மாவதியை தேடிவந்தனர். கணவர் காவல்துறையினர் தேடுவதை அறிந்த பத்மாவதி, வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவருடன் தாலுகா காவல் நிலையத்தில் நேற்று ஆஜரானார். அப்போது அங்கிருந்த வீரமணிக்கும் அவரது மனைவி பத்மாவதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் வீரமணி - பத்மாவதி தம்பதி

இதில், ஆத்திரமடைந்த வீரமணி மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி பத்மாவதியை குத்தி விட்டு, அவரும் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். பத்மாவதியின் அலறல் சத்தம் கேட்டு காவல் நிலையத்தில் இருந்து ஓடிவந்த காவலர்கள் இருவரையும் மீட்டு சிகிக்கைச்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : குடும்பம் நடத்த மறுத்த மனைவி - நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த கணவன்!

Intro:Body:திருவாரூர் காவல் நிலையம் முன்பு மனைவியை கத்தியால் குத்தியதுடன், தன்னையும் குத்தி கொண்டு கணவன் தற்கொலை முயற்சி. காவல்துறையினர் இருவரையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் தீவிர சிகிச்சைக்கு அனுமதி.

திருவாரூர் அருகே சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி(42). இவர்
தங்கநகை செய்யும் பணி செய்து வருகிறார். இவரது மனைவி பத்மாவதி(30). இருவருக்கும் ஆறு வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில தினங்களுக்கும் முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பத்மாவதி கணவனிடம் சொல்லாமல் திருச்சிக்கு
சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று கணவர் வீரமணி திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் மனைவி காணவில்லை எனவும் கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் இதை அறிந்த மனைவி பத்மாவதி வழக்கறிஞர் ராஜேந்திரன்
என்பவருடன் தாலுகா காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். இதனைதொடர்ந்து வீரமணிக்கும் அவரது மனைவிக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை வாய்தகராறு ஏற்பட்டது. இதில்
ஆத்திரமடைந்த வீரமணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி
பத்மாவதியை மீது சரமாரியாக குத்தியதில் படுகாயமடைந்தார், மேலும் தன்னையும் கத்தியால் குத்திக் கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு காவல் நிலையத்திலிருந்த
காவலர்கள் இருவரையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.