ETV Bharat / state

கண்முன்னே எரிந்த வீடுகள்; கண்ணீர் விட்டுக் கதறிய பெண்கள்!

திருவாரூர்: சவ ஊர்வலத்தில் வெடித்த வெடியால் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு வீடுகள் முற்றிலும் எரிந்து, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.

எரிந்த வீடுகள்
author img

By

Published : Jul 4, 2019, 11:33 PM IST

திருவாரூரில் நகர் பகுதியான விஷ்ணு தோப்பு பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்குப் பின்புறம் சுடுகாடு உள்ள நிலையில் இன்று சவ ஊர்வலத்தின் போது சிலர் வெடி வெடித்து சென்றனர். இதில், அருகில் உள்ள கூரை பற்றியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டுக்குப் பரவத்தொடங்கியது.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததில் மூன்றுக்கும் மேற்பட்ட தீ அணைப்பு வாகனங்களைக் கொண்டு, இரண்டு மணிநேர போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.

எரிந்த வீடுகள், தீயில் நாசம், திருவாரூர்
கண்ணீர் விட்டுக் கதறும் பெண்கள்

இந்த விபத்தில் செல்வம், குமார், பழனிவேல் ராஜேந்திரன், லட்சுமி, வடிவேல் ஆகிய ஆறு பேரின் குடிசை வீடுகளும் முழுவதும் எரிந்து நாசமானது. இதில், அவர்கள் உடைமைகள் பொருட்கள் எனப் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது. தங்கள் கண்முன்னே வீடுகள் எரிந்து நாசமானதைப் பார்த்து கண்ணீர் விட்டுக் கதறிய சம்பவம் அகிலுள்ளவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

எரிந்த வீடுகள்

இந்த தீ விபத்து குறித்து நகரக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:

Body:திருவாரூரில் தீ விபத்தில் 6 வீடுகள் முற்றிலும் சேதமானதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் நாசமானது.

திருவாரூரில் நகர் பகுதியான விஷ்ணு தோப்பு பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கு பின்புறம் சுடுகாடு உள்ள நிலையில் இன்று சவ ஊர்வலத்தின் போது சவ ஊர்வலம் முன்னே சிலர் வெடி வெடித்து சென்றனர். இதில் வெடித்த வெடியானது அருகில் உள்ள கூரையில் பற்றியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டுக்கு பரவத்தொடங்கியது.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததில் மூன்றுக்கும் மேற்பட்ட தீ அனைப்பு வாகனங்களை கொண்டு, இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

இந்த விபத்தில் செல்வம், குமார், பழனிவேல் ராஜேந்திரன், லட்சுமி மற்றும் வடிவேல் ஆகிய 6 பேரின் குடிசை வீடுகளும் முழுவதும் எரிந்து நாசமானது. இதில் அவர்கள் உடைமைகள் பொருட்கள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.

தங்கள் கண்முன்னே வீடுகள் எரிந்து நாசமானதை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் அருகிலுள்ளவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் தீ விபத்து குறித்து நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.