தமிழ்நாட்டில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைப்பெறவுள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகுன்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டப்பேரவை தொகுதியில், அதிமுக வேட்பாளரான தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் போட்டியிடுகிறார்.
அவர் நன்னிலம் தொகுதிக்குள்பட்ட, பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக நன்னிலம் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த பயணிகளிடமும், ஆட்டோ ஓட்டுனர்களிடமும் துண்டு பிரச்சுரங்கள் வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: 17ஆவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் பங்கேற்பு