திருவாரூர் மாவட்டம் திருவாதிரை மங்கலத்தைச் சேர்ந்த தம்பதி பாரதிமோகன் (27) - வேம்பு (23). இவர்கள் இருவரும் வாய் பேச இயலாதவர்கள். இருவருக்கும் இரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, பாவேந்தன் என்னும் ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்ததாகக் கூறப்படுகிறது.
அதேபோல் இன்று (ஜூன் 24) காலை இருவருக்கும் வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த பாரதிமோகன், உறங்கிக் கொண்டிருந்த தனது ஒன்றரை வயது குழந்தையை தூக்கி ஓங்கி தரையில் அடித்துள்ளார்.
அதனால் குழந்தை படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தது. அதையடுத்து அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு குழந்தை சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தது. இந்தச் சம்பவம் குறித்து வைப்பூர் காவல் துறையினர் பாரதிமோகனை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: தந்தை-மகன் மரணம்: ரூ.2 கோடி நிவாரணம் வழங்க வலியுறுத்தி கடையடைப்பு