ETV Bharat / state

விவசாயிகளை மிரட்டும் சுமை தூக்கும் தொழிலாளர்கள்.. சாடிய பி.ஆர்.பாண்டியன் - Farmers struggle

திருவாரூர்: விவசாயிகளிடம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்
author img

By

Published : Mar 4, 2021, 9:06 AM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பிஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்.
இந்தப் போராட்டத்தில், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் சுமைதுக்கும் தொழிலாளர்கள் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக கோரி நுகர்பொருள் வாணிப கழக வாயிலில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் பி.ஆர். பாண்டியனை கைது செய்ய முயன்ற போது விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பிஆர்.பாண்டியன் கூறுகையில், ‘காவிரி டெல்டா பகுதியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்கிறோம் என்ற பெயரில் நுகர்பொருள் வாணிப கழக கொள்முதல் அலுவலர்களும், சுமை தூக்கும் தொழிலாளர்களும் கூட்டு சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டதோடு, சுமைத்தூக்கும் தொழிலாளர்களை வைத்து விவசாயிகளை மிரட்டி, அச்சுறுத்தி வருகின்றனர்.

மேலும், நெல்லை கொள்முதல் செய்யாமல் பத்து முதல் 20 தினங்கள் வரை உள்ளூர் விவசாயிகளின் நெல் மூட்டைகள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பி.ஆர். பாண்டியன்
இது தொடர்பாக பல கட்ட போராட்டங்களை நடத்தியும் உரிய தீர்வு கிடைக்கவில்லை. இதற்கு நுகர்பொருள் வாணிப கழகமே துணை போகின்றனர். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு மூட்டை ஒன்றுக்கு 35 ரூபாய் வீதம் 400 முட்டைகளுக்கு உரிய தொகையை பெற்று தந்தால் மட்டுமே மீதம் உள்ள நெல் முட்டைகளை கொள்முதல் செய்வோம் என மன்னார்குடி மண்டல மேலாளரிடம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
இப்பகுதி விவசாயிகளின் நெல் மூட்டைகள் பல நாள்களாக காத்திருக்கும் சூழலில் காவிரி டெல்டா மாவட்டங்களில் வெளிமாநில நெல் எந்தத் தடையின்றி கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும், தேர்தல் ஆணைய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பின்னர் இது மேலும் அதிகரித்துள்ளது.
இதனை வன்மையாக கண்டிக்கிறோம். எனவே தேர்தல் ஆணையர் சத்தியப்பிரத சாகு இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தனியாக குழு ஒன்று அமைத்து ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.