ETV Bharat / state

பெப்சி நிறுவனத்தைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! - சிப்ஸ்

திருவாரூர்: குஜராத் விவசாயிகள் மீது வழக்குப்போட்டு இழப்பீடு கேட்கும் பெப்சி நிறுவனத்தைத் தடை செய்யக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூர்
author img

By

Published : May 2, 2019, 10:59 PM IST

சிப்ஸ் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் காப்புரிமை பெற்ற உருளைக்கிழங்கு விதைகளை உரிய அனுமதியின்றி பயிர் செய்த குஜராத்தைச் சேர்ந்த ஒன்பது விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் வழக்குத் தொடர்ந்ததுள்ளது. அதில், சிப்ஸ் தயாரிக்க பயன்படும் உருளைகிழங்கின் காப்புரிமை தங்களிடம் உள்ளதால், அனுமதியின்றி பயிர் செய்து நிறுவன உரிமைகளை மீறிய விவசாயிகளிடமிருந்து இழப்பீடாக ரூ.4.2 கோடி அளிக்க வேண்டும் என பெப்சி நிறுவனம் கேட்டுள்ளது.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இதனைக் கண்டித்து திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் நஷ்ட ஈடு கேட்கும் பெப்சி நிறுவனத்தைக் கண்டித்தும், விவசாயிகளிடம் இழப்பீடு கேட்கும் பெப்சி நிறுவனத்தைத் தடைசெய்யக்கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

Intro:குஜராத் விவசாயிகள் மீது வழக்குப் போட்டு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரும் பெப்ஸி கம்பெனியை தடை செய்ய கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Body:குஜராத் விவசாயிகள் மீது வழக்குப் போட்டு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரும் பெப்ஸி கம்பெனியை தடை செய்ய கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நமது விவசாயம் பன்னாட்டு நிறுவனங்களால் அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சிப்ஸ் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் காப்புரிமை பெற்ற உருளைக்கிழங்கு விதைகளை குஜராத் விவசாயிகள் அனுமதியின்றி பயிரிட்டு விற்பனை செய்து வந்ததாக அம்மாநிலத்தை சேர்ந்த ஒன்பது விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

சிப்ஸ் தயாரிக்க பயன்படும் உருளை கிழங்கு காப்புரிமை தங்கள் நிறுவனத்திடம் உள்ளதால் அதை பயிர் செய்து நிறுவன உரிமைகளை மீறிய விவசாயிகள் நஷ்ட ஈடாக 4.2 கோடி அளிக்க வேண்டும் என பெப்ஸி நிறுவனம் கேட்டுள்ளது.

இந்த கார்பரேட் நிறுவனத்தை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் விவசாயிகளிடம் நஷ்ட ஈடு கேட்கும் பெப்ஸி நிறுவனத்தை கண்டித்தும், அந்நிறுவனத்தை தடை செய்யக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.