ETV Bharat / state

பருத்தி, குவிண்டாலுக்கு ரூ.8 ஆயிரம் விலை நிர்ணயம்:  முதலமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை! - முதலமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை

திருவாரூர்: ஒரு குவிண்டால் பருத்திக்கு ரூ.8 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பருத்தி
பருத்தி
author img

By

Published : May 22, 2021, 1:10 PM IST

திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 17 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பருத்தி எடுக்கும் பணி பல்வேறு இடங்களில் தொடங்கியுள்ளது. விவசாயிகள் பல்வேறு இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு தங்களது விளைபொருள்களை உற்பத்தி செய்கிறார்கள். விதைப்பில் தொடங்கி பல்வேறு நிலைகளைக் கடந்து, அறுவடை செய்யும் வரை வெற்றிகரமான விளைச்சலுக்கு உத்தரவாதம் இல்லை.

பருத்தி
பருத்தி

பருத்தியில் இதுபோன்ற பின்னடைவுகள் இன்னும் அதிகம். நாளுக்கு நாள் விலை மாறிக்கொண்டே இருக்கும். இந்நிலையில் கடந்தாண்டு ஒரு குவிண்டால் பருத்திக்கு 5 ஆயிரத்து 800 ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே விலை கிடைத்தது. கிலோ ஒன்றுக்கு 25 முதல் 30 ரூபாய் மட்டுமே கிடைத்ததால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர்.

இதனிடையே, இந்தாண்டு கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் பருத்தி கொள்முதலில் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டை போலவே இந்தாண்டும் பருத்தி உரிய விலை போகாதோ? என்ற அச்சம் விவசாயிகளைப் பீடித்துள்ளது.

விவசாயிகள் முதலமைச்சருக்கு கோரிக்கை

இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, ஒரு குவிண்டால் பருத்திக்கு 8 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க மருத்துவக் குழு பரிசீலினை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.