திருவாரூர்: நன்னிலம் அருகே கொல்லுமாங்குடியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசின் ஒப்புதல் பெற்று சர்க்கரை ஆலை இயங்கிவந்தது. இந்நிலையில் சர்க்கரை ஆலையின் கழிவுகள் வேளாண் நிலத்தில் கலந்ததால் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் காரணமாக சர்க்கரை ஆலை மூடப்பட்டது.
இதனால் நன்னிலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கரும்பு உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே கரும்பு உழவர்களின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில்கொண்டு, இந்தச் சர்க்கரை ஆலை கழிவுகளை அகற்ற மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். மீண்டும் இந்தச் சர்க்கரை ஆலையைப் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என உழவர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: படகு இறங்குதள விரிவாக்கத்துக்குத் தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு