நாகப்பட்டினம் மாவட்டம் ராதாதிமங்களம் அய்யாறு காலனியைச் சேர்ந்த கோபால் (65) இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக காது கேளாமல் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஆண்டிபந்தல் அருகே உள்ள ரயில் பாதையைக் கடக்க முயன்றபோது திருவாரூரிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ரயில் முதியவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம்