திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேவுள்ள குவளைக்காலில் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கனை வீடு வீடாகச் சென்று அதிமுகவினர் வழங்கியதாக கூறி, திமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் இன்று (டிச.30) சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முன்னதாக, தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குடவாசலில் பேட்டியளித்தபோது, “பொங்கல் தொகுப்பிற்கான டோக்கனை நியாயவிலைக் கடை ஊழியர்கள் தான் வழங்குகிறார்கள், அதிமுகவினர் யாரும் வழங்கவில்லை” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று (டிச.30) மாலை 3 மணியிலிருந்து அதிமுகவினர் டோக்கன் வழங்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு டோக்கன்: அதிமுகவினர் வழங்குவதை நிறுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்!