ETV Bharat / state

'போலீஸ்கிட்டயா மாட்டி விட்ட' - வன்மம் வைத்து திமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு! - Cannabis Sales in Thiruvarur

திருவாரூர்: கஞ்சா விற்பனை குறித்து காவல் துறைக்குத் தகவல் கொடுத்த திமுக பிரமுகரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பிரமுகர் திராவிடமணி
திமுக பிரமுகர் திராவிடமணி
author img

By

Published : May 18, 2020, 9:08 PM IST

திருவாரூர் அருகே மருதபாடி பகுதியில் தொடர்ச்சியாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த பல நாட்களாக மதுபானக் கடைகள் மூடியிருந்த நிலையில், இளைஞர்கள் பலர் கஞ்சா போதைக்கு அடிமையாகி உள்ளனர். இதனைப் பயன்படுத்தி, மருதபாடி பகுதியில் கஞ்சா விற்பனை விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இந்நிலையில் இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த திமுக பிரதிநிதி திராவிட மணி (54) காவல் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் திராவிடமணி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி விட்டனர். இதில் மயங்கி விழுந்த திராவிட மணியை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, வெட்டிவிட்டு தப்பி ஓடிய இளைஞர்களைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மது போதையில் தம்பியை கொன்ற அண்ணன் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.