கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் மாநிலம் தழுவிய முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தின்போது, திமுக விவசாயத் தொழிலாளர் அணியின் மாநில துணைச் செயலாளர் சங்கர், திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அமுதா சந்திரசேகர், இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் ரஜினி சின்னா உள்ளிட்ட 4 பேர் மீது அரசுக்குச் சொந்தமான ஆவின் பாலகத்தைச் சேதப்படுத்தியதாகக் கூறி திருவாரூர் நகரக் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்தது.
இந்நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிபதி கலைமதி குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார். இந்த தீர்ப்பின் மூலம் திமுக உறுப்பினர்கள் நால்வரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.