ETV Bharat / state

திக கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்ட அதிமுக கொடி! - கொடிக்கம்பம்

திருவாரூர்: பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திராவிடர் கழக கொடிக் கம்பத்தில், அதிமுக கொடி ஏற்றபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

flag திக கொடி கம்பத்தில் பறக்கும் அதிமுக கொடி
author img

By

Published : Mar 21, 2019, 4:59 PM IST

Updated : Mar 21, 2019, 7:58 PM IST

திருவாரூரில் நாடளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்கள் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதற்காக திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், கட்சி கொடிகள் அகற்றப்பட்டு தீவிர வாகன சோதனையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் பெரியார் சிலை அமைந்துள்ளது. அதன் அருகே உள்ள திராவிடர் கழக கொடிக் கம்பத்தில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள், அதிமுக கொடியை ஏற்றி சென்றுள்ளார். இன்று காலை திராவிடர் கழக கொடிக் கம்பத்தில் அதிமுக கொடி ஏற்றபட்டுள்ளதை கண்டு, பெரியார் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக திராவிடர் கழகத்தினரும் கூட்டணி கட்சியுமான திமுகவினரும் இணைந்து அதிமுக கொடியை அகற்றினர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர்
சம்பத் முருகன்

திருவாரூரில் திராவிடர் கழக கொடி கம்பத்தில் அதிமுக கொடி ஏற்றபட்டதால்  பரபரப்பு. காவல்துறையினர் விசாரணை.

திருவாரூரில் சட்டமன்ற, நாடளுமன்ற  தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. திமுக அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் உள்ளதால் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், கட்சி கொடிகள் அகற்றப்பட்டு தீவிர வாகன சோதனையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் பெரியார் சிலை அமைந்துள்ளது. அதன் அருகே உள்ள கொடி கம்பத்தில் நேற்று இரவு மர்ம நபர் யாரோ அதிமுக கொடியை ஏற்றி சென்றுள்ளார். இன்று காலை திராவிடர் கழக கொடி கம்பத்தில் அதிமுக கொடி ஏற்றபட்டுள்ளதை கண்டு அக்கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக
திராவிடர் கழகத்தினரும் கூட்டணி கட்சியான திமுகவினரும் இணைந்து அதிமுக கொடியை அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இச்சம்பவம் குறித்து நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Visual - FTP
TN_TVR_02_21_ADMK_FLAG_ISSUE_7204942
Last Updated : Mar 21, 2019, 7:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.