ETV Bharat / state

டெல்டா விவசாயிகளை நிர்கதியாக்கும் ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகள்! - கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு

திருவாரூர் அருகே விவசாய நிலத்தில் ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் பரவுவதால் விளைநிலம் நாசமாவது அடிக்கடி நிகழ்ந்துவருகிறது. டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலங்களாக அறிவித்த அரசுக்கு, பாலைநிலமாகும் தங்கள் விளைநிலங்கள் குறித்து அக்கறையில்லையா என டெல்டா விவசாயிகள் குமுறுகின்றனர்.

டெல்டா விவசாயிகளை நிர்கதியாக்கும் ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகள்!

author img

By

Published : Dec 27, 2020, 10:47 PM IST

Updated : Dec 29, 2020, 7:05 PM IST

திருவாரூர்: நெல் விளையும் பூமியை பாதுகாத்து வேளாண்மைத் தொழில் அழிந்து போகாமல் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட வேண்டியுள்ளது.

அதிலொரு போராட்டம் தான் ஓஎன்ஜிசிக்கு எதிரானது. இந்தியாவின் ஒட்டுமொத்த எரிசக்தி தேவையில் பாதியை எண்ணெய், இயற்கை எரிவாயு மூலமாகப் பெற ஓஎன்ஜிசி எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் திட்டமிட்டுள்ளது.

ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு
ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு

ஆனால் விளைநிலத்தின் அடியில் கச்சா எண்ணெய் குழாய்கள் பதிக்கும்போது மண் வளம் கெட்டுப்போகும் வாய்ப்பு அதிகம் என விவசாய அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையெல்லாம் புறந்தள்ளிய ஓஎன்ஜிசி நிறுவனம், விளைநிலத்தை அகழ்ந்து எண்ணெய் குழாய்கள் அமைத்தது. அதன் விளைவு தான் நாளொரு ஒரு பொழுது என குழாய் உடைப்பு ஏற்பட்டு, அறுவடைக்கு தயாராகும் பயிர்கள் அனைத்தும் வீணாகின்றன.

எண்ணெய் படலத்தில் ஊறும் பயிர்கள்
எண்ணெய் படலத்தில் ஊறும் பயிர்கள்

பாலைவனமாகும் டெல்டா மாவட்டங்கள்

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரதான தொழில், விவசாயம்தான். நம் மாநிலத்தின் 40 விழுக்காடு உணவு தேவையை பூர்த்தி செய்வது டெல்டா மாவட்டங்கள்தான்.

பாலைவனமாகும் டெல்டா மாவட்டங்கள்
பாலைவனமாகும் டெல்டா மாவட்டங்கள்

இங்கு விவசாய நிலங்களை பாதிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட ஹைட்ரோகார்பன், மீத்தேன் மற்றும் ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகள் போன்ற திட்டங்களால் மண்வளம் கேள்விக்குறியாகிவருகிறது. மண் வளமற்று போகும்போது அதில் பயிர் எப்படி விளையும்? இப்படித்தான் அங்கு நிலங்கள் பாலைவனமாகி விவசாயம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு

ஓஎன்ஜிசி.,யின் கச்சா எண்ணெய் குழாய்களின் உடைப்பால் அதிகமாக பாதிக்கப்படுவது திருவாரூர் மாவட்டம் தான். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் 74 கிணறுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. களத்தில் 259 கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. தற்போது 150 கிணறுகள் பயன்பாட்டில் உள்ளன. எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கப்படும் கிணறுகள் 52 உள்ளன. இவை அனைத்தும் தகவலறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களாகும்.

விளைநிலங்களில் பரவிக் கிடக்கும் கச்சா எண்ணெய்

ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகளால் திருவாரூரில் உள்ள கமலாபுரம், எருக்காட்டூர், வெள்ளக்குடி உள்ளிட்ட இடங்களில் உள்ள விளைநிலங்களில் அடிக்கடி குழாய்களில் வெடிப்பு ஏற்படுகிறது. இந்த வெடிப்பு விளைநிலங்களில் கச்சா எண்ணெய் கலக்க வழிவகை செய்கிறது. பச்சைப் படர்ந்து காணப்பட வேண்டிய நிலம் இதனால் எண்ணெய் படலங்களோடு காணப்படுகின்றன. மண்வளமும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டம்

தங்களுக்கு குலசாமியாக விளங்கும் விளைநிலங்களின் தன்மை கெடாமலிருக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அரசோ விவசாயிகளின் கூக்குரல்கள் விழாத வண்ணம் காதுகளை மூடிக் கொள்கின்றது.

சமீபத்தில் கூட கமலாபுரம் அருகே உள்ள எருக்காட்டூரில் 3ஆவது முறையாக ஓஎன்ஜிசி எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதில் வயல் வழியாக சென்ற குழாயிலிருந்து கசிந்த எண்ணெய் வயல்காடு முழுவதும் பரவியது. இப்படி அப்பகுதியில் குழாய்கள் உடைவது முதல் முறை கிடையாது.

தனது நிலம் கண்டு நோகும் விவசாயி!
தனது நிலம் கண்டு நோகும் விவசாயி!

ஏக்கருக்கு ஆயிரக்கணக்கில் கடன் வாங்கி பயிரிடும் விவசாயிகள், கச்சா எண்ணெய் குழாய் உடைப்பால் தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்.

வேளாண் மண்டல அறிவிப்பு வெறும் அறிவிப்பாக மட்டுமே தான் இருக்கிறது, நடவடிக்கைகள் ஏட்டு சுரைக்காய் போல பயன்படாமலே இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

உரிய நடவடிக்கை.. உடனடி தேவை

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகள் உள்ளிட்டவை அமைக்க அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது. தற்போது கூட திருவாரூர் மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்திற்கு எட்டு கிணறுகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது விவசாயிகளுக்கு பேரிடியாக விழுந்துள்ளது.

விவசாயிகளை நிர்கதியாக்கும் ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகள்!

நாற்று நடவு செய்து, களை பிடுங்கி அறுவடைக்கு தயாராகும் பிற மாவட்ட விவசாயிகளைப் போல அல்லாமல், கச்சா எண்ணெய்யை வெளியேற்ற அனுதினமும் போராடும் சூழலுக்கு திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இனியும் காலந்தாமதிக்காமல் அரசு எண்ணெய்க் குழாய்களை அகற்ற வேண்டும், இல்லை என்றால் கச்சா எண்ணெய்யால் பாழான மண்ணை மாற்றிக் கொடுக்க வேண்டுமென்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Last Updated : Dec 29, 2020, 7:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.