ETV Bharat / state

கவனக்குறைவாக செயல்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்திய செவிலியர் இடைநீக்கம் - injection

திருவாரூர்: அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பிரசவித்த பெண் இறந்ததையடுத்து, செவிலியர் உட்பட ஐந்து பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மருத்துவமனை முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் அரசு மருத்துவமனை
author img

By

Published : Aug 3, 2019, 2:41 AM IST

திருவாரூர் மாவட்டம் திருக்களம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாதேவன்(35). இவரது மனைவி பவிதா. இவர்களுக்கு தீரன் என்ற 2 வயது மகன் உள்ளார். கடந்த 24ஆம் தேதி குடவாசல் அரசு மருத்துவமனையில் இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, பவிதாவுக்கு இரத்தபோக்கு அதிகமாக இருந்ததால் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து வீட்டிற்குச் செல்ல வேண்டுமென்பதால், மருத்துவர்கள் கருத்தடை ஊசி செலுத்தினர். அதன்பின் சிறிது நேரத்திலேயே பவிதா மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், பவிதா மரணத்திற்குக் காரணம் மருத்துவர்களின் தவறான சிகிச்சை தான் எனக்கூறி பிறந்த கைக்குழந்தையுடன் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மேலும், அவர்கள் மருத்துவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பவிதாவின் உறவினர்கள்

இதனையடுத்து திருவாரூர் அரசு மருத்துவமனை முதல்வர் விஜயகுமார், கவனக்குறைவாக வேலை பார்த்ததாகக் கூறி செவிலியர் விஜயகுமாரி, பாரதி, வித்யா, உதவியாளர்கள் ரவிக்குமார், சுந்தரராஜன் ஆகிய ஐந்து பேரை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Intro:

Body:திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பிரசவித்த பெண் இறந்ததையடுத்து சிகிச்சை அளித்த செவிலியர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மருத்துவமனை முதல்வர் உத்தரவு.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருக்களம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவன்(35) இவர் விவசாயக் கூலித் தொழிலாளி, இவரது மனைவி பவிதா. இவர்களுக்கு தீரன் என்ற 2 வயது மகன் உள்ளார். கடந்த 24 ஆம் தேதி குடவாசல் அரசு மருத்துவமனையில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. அப்போது பவிதாக்கு இரத்தப்போக்கு அதிகமாக உள்ளது எனக்கூறி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலையில் கருத்தடை ஊசி போட்டதாகவும் இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே பவிற்றா மயக்கம் அடைந்துள்ளார். மருத்துவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு மருத்துவர்கள் சரியான சிகிச்சை அளிக்காத காரணத்தால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் நேற்று மருத்துவமனை முன்பு பவிதா மரணத்திற்கு காரணம் தவறான சிகிச்சை என கூறி பிறந்த கை குழந்தையுடன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பவிதாவின் உறவினர்கள் பவிதாவின் மரணத்திற்கு மருத்துவர்களே காரணம் என கூறி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் விஜயகுமார் நடவடிக்கை பெயரில் கவனக்குறைவாக வேலை பார்த்ததாக கூறி செவிலியர் விஜயகுமாரி,பாரதி,வித்யா ஆகியோரையும் மேலும் உதவியாளர்கள் ரவிக்குமார், சுந்தரராஜன் உள்ளிட்ட ஐந்து பேரை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.