ETV Bharat / state

சாலை மறியலில் ஈடுபட்ட பருத்தி விவசாயிகள்! - Cotton auction at Thiruvarur

திருவாரூர்: ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தியைக் குறைந்த விலைக்கு ஏலம் கேட்பதாகக் கூறி நூற்றுக்கும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Cotton Farmers protest at Thiruvarur
Cotton Farmers protest at Thiruvarur
author img

By

Published : Jun 17, 2020, 10:42 PM IST

திருவாரூர் மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பருத்தி ஏலம் எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதனிடையே பருத்திக்கு உரிய விலை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மூங்கில்குடி என்ற இடத்தில் செயல்பட்டுவரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் விடப்பட்டுள்ளது. இதில் இந்தியப் பருத்திக் கழகம் சார்பில் 120 குவிண்டால் மட்டுமே பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள 600 குவிண்டால் அளவிலான பருத்தியை தனியார் வியாபாரிகள் ஏலம் கேட்டுள்ளனர். இதில் ஒரு கிலோ பருத்தி 30 ரூபாய் முதல் 31 ரூபாய் வரை மட்டுமே ஏலம் விடப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். அதேசமயம் இந்தியப் பருத்திக் கழகம் சார்பில் ஒரு கிலோ பருத்தி 52 முதல் 55 ரூபாய் வரை ஏலம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இச்சூழலில் மிகக் குறைந்த அளவில் பருத்தி ஏலம் விடப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடம் விரைந்த காவல் துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில் சாலை மறியலை கைவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.