திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சைக்காகத் தொடங்கபட்டுள்ள சிறப்புப் பிரிவில் சீனாவிலிருந்து ஊர் திரும்பிய நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த அசோக் குமார் என்பவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், சீர்காழியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரும் மருத்துவச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இருவருடைய ரத்த மாதிரிகளையும் மருத்துவர்கள் சேகரித்து சென்னை கிண்டி மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் சீனாவில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்த ராஜா (29) என்பவர் கடந்த சில நாள்களுக்கு முன்பாக திருவாரூர் திரும்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து இவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'கரோனா பாதிப்பை பயன்படுத்தி கல்லாக்கட்டும் காரைக்குடி உணவகம்'