உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தின் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்தனர். இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனா தொற்றை குறைப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மூடக்கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில், உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கோயில் வளாகம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
அதே நேரத்தில் வெளியூர்களிலிருந்து வரும் குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகள் கோயிலுக்குள் வருவதற்கு முன்பாகவே அவர்களிடம் கிருமி நாசினிகள் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானம் மூடப்பட்டதால், விளையாட்டு வீரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படக் கூடிய திருவாரூர் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
இதையும் படிங்க: குமரியில் இளைஞர்கள் இருவருக்கு கொரோனா அறிகுறி