இந்தியா முழுவதும் கரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதனைத் தடுக்கும் நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதில் மக்களின் நலன் கருதி காய்கறிக் கடைகளும் மளிகைக் கடைகளும் காலை 6 மணி முதல் ஒரு மணி வரை திறந்திருக்கலாம் என அரசு அறிவித்திருந்தது.
இதனை பொதுமக்கள் கவனத்தில் கொண்டு சமூக இடைவெளியைப் பின்பற்றி, காய்கறிகளையும் அத்தியாவசியப் பொருட்களையும் வாங்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருவாரூரில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சாலைகளின் இருபுறமும் காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் சாதாரண நாட்களைப் போல் அங்கும் இங்குமாக உலாவி வருகின்றனர்.
மேலும் இரு சக்கர வாகனங்களும் இயல்பு நிலைக்குத் திரும்பியது போல் வழக்கம் போல் இயங்கிக் கொண்டு வருகின்றன. காவல் துறையினர் அறிவுறுத்தியும் அதை பொதுமக்கள் யாரும் கண்டு கொள்ளாமல் தங்கள் வேலைகளை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் ஊரடங்கை மீறிய சுமார் 3ஆயிரம் பேர் கைது: 1,407 வாகனங்கள் பறிமுதல்!