ETV Bharat / state

கரோனா தொற்று: மியான்மர் நாட்டைச் சேர்ந்த 13 பேர் கைது

திருவாரூர்: கரோனா தொற்றை பரப்பியதாக கூறி மியான்மர் நாட்டைச்சேர்ந்த 13 பேரை நீடாமங்கலம் காவல் துறையினர் கைது செய்தனர்.

arrest
arrest
author img

By

Published : Apr 10, 2020, 11:06 AM IST

மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற சமய மாநாட்டில் பங்கேற்பதற்காக மியான்மர் நாட்டைச் சேர்ந்த 13 பேர் வந்துள்ளனர். மாநாடு முடிந்து அவர்கள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அவர்களது உறவினர்கள் வீட்டில் தங்கி உள்ளனர். ஆனால்,கரோனா தொற்று நோயை பரப்பும் வகையில் இவர்கள் செயல்பட்டதாக கூறி நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரனை மேற்கொண்ட காவல் துறையினர் அவர்கள் மீது 144 ஊரடங்கு உத்தரவை மீறுதல், கரோனா தொற்று நோயை பரப்பும் வகையில் செயல்படல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இவர்களில் ஒரு சிலருக்கு கரோனா தொற்று இருப்பதால் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கரோனா தொற்று சிகிச்சை காரணமாக 13 பேரும் பினையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.