திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள சேரன்குளம் ஊராட்சியில் இந்திய அரசு, தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தஞ்சாவூர் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் தூய்மை, கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு, வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மன்னார்குடி ஒன்றிய குழுத்தலைவர் சேரன்குளம் தி.மனோகரன் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
இதில் கள விளம்பர துறை அலுவலர் ஆனந்த பிரபு பேசியதாவது; மத்திய, மாநில அரசுகள் சுகாதார நடவடிக்கைகளுக்காக பல லட்சம் கோடி ரூபாய்களை செலவிட்டு மக்கள் நலனை பேணிக் காக்கிறது. மக்கள் தங்கள் பங்காக தூய்மையை பராமரித்தால், அரசு பல லட்சம் கோடி நிதியை வெவ்வேறு நலத்திட்ட பணிகளுக்கு பயன்படுத்த முடியும் என்றார்.
கரோனா விழிப்புணர்வு, தடுப்பூசி விழிப்புணர்வு மற்றும் மக்கும் குப்பை, மக்கா குப்பை, தூய்மை பணி விழிப்புணர்வு ஆகியவை குறித்து பெண்கள் கோலம் வரைந்தனர். மேலும் விழிப்புணர்வு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பங்கேற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நெம்மேலி, மூன்றாம்சேத்தி தென்பாதி, மரவாக்காடு ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர், தூய்மை காவலர்கள் கலந்து 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஏழு பேர் விடுதலை... விரைவில் நல்ல தீர்வு: ஓபிஎஸ்