ETV Bharat / state

கரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் - ஓவியர் சங்கத்தினர்

திருவாரூர்: கரோனா வைரஸ் தொற்று ஓழிப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கரோனா விழிப்புணர்வு ஓவியங்களை ஓவியர் சங்கத்தினர் வரைந்தனர்.

கரோனா விழிப்புணர்வு ஓவியங்கள்
கரோனா விழிப்புணர்வு ஓவியங்கள்
author img

By

Published : Apr 11, 2020, 11:14 AM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் பரவலைத் தடுக்க ஒரே வழி சமூக இடைவெளியை அனைவரும் கடைபிடிப்பதே ஆகும். இதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வெளியில் வருவதை தவிர்த்து வீட்டிலேயே இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.

தனித்திரு , விழித்திரு, வீட்டிலிரு
தனித்திரு , விழித்திரு, வீட்டிலிரு
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஓவியம் வரைந்து மக்களுக்கு ஓவியர்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பில் பிரமாண்ட விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய கரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ்
கரோனா வைரஸ்
இதனை இன்று காலை கரோனா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நகராட்சி ஊழியர்கள், மருத்துவ பணியாளர்கள், காவல் துறையினர், வருவாய்த் துறையினர், உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு அதில் எழுதிய வாசகங்களை உறுதிமொழியாக ஏற்றனர் .தனித்திரு , விழித்திரு, வீட்டிலிரு, உடலால் விலகி இருப்போம், உள்ளதால் இணைந்து இருப்போம் என்ற வாசங்களை உறுதிமொழியாக ஏற்றனர். அப்பகுதிக்கு காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்களும் சமுக இடைவெளியுடன் நின்று விழிப்புணர்வு வாசகத்தைப் படித்துப் உறுதிமொழி ஏற்றனர்.
கரோனா விழிப்புணர்வு ஓவியங்கள்
மேலும் தூய்மைப் பணியாளர்கள் பொதுமக்களிடையே கையெடுத்துக் கும்பிட்டு கரோனாவை ஒழிப்பதற்கு தாங்கள் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் உங்களுக்கு தேவையான பொருட்களை நாங்கள் வாங்கி தருகிறோம் என கூறி அவர்களிடம் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டனர்.இதையும் படிங்க: தற்கொலை செய்து கொள்வேன் - கமல் வீட்டில் கரோனா போஸ்டர் ஒட்டிய ஊழியர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.