ETV Bharat / state

திருவாரூரில் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி! - கரோனா உறுதி

திருவாரூர். டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட திருவாரூரைச் சேர்ந்த ஏழு பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவாரூரில் 7பேருக்கு கரோனா உறுதி!
திருவாரூரில் 7பேருக்கு கரோனா உறுதி!
author img

By

Published : Apr 3, 2020, 6:07 PM IST

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டில் கலந்து கொண்ட நபர்களுக்கு அதிக அளவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்ததாகத் தமிழ்நாடு சுகாதாரத்துறை தொடர்ந்து அறிவித்துவருகிறது.

இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 26 நபர்கள் உள்பட மியான்மர் நாட்டை சேர்ந்த 13 நபர்களும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சையளிக்கும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர்.

திருவாரூரில் 7பேருக்கு கரோனா உறுதி!

இந்நிலையில் அவர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில், திருவாரூர் மாவட்டத்தில் ஏழு பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் திருவாரூர் மாவட்டம் கூத்தநல்லூரைச் சேர்ந்த மூன்று பேருக்கும் நீடாமங்கலத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கும், மியான்மர் நாட்டில் இருந்து வந்திருந்த 2 பேருக்கும் என ஏழு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க....தமிழ்நாட்டைப் பற்றி ஓடிசா அரசுக்கு பொய்யான தகவலளித்த தொழிலாளர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.