திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்டுமான அனைத்து தொழில் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் ஆர்.வி.ரவிச்சந்திரன் தலைமையில் கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்டுமான பொருள்கள் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும். கட்டுமான பொருள்களின் விலை நிர்ணயக் குழு அமைக்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் இணையவழி சேர்ப்பு, புதுப்பித்தல் முறை எளிமைபடுத்த பட வேண்டும். கட்டுமான துறைகளுக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும்.
மணல் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு வழிவகை செய்யவேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் எப்படி வீடு கட்டிமுடிக்கப்போகிறோம் என்றே தெரியவில்லை'