ETV Bharat / state

தமிழ்நாட்டிற்கு வருகிறது காவிரி நீர் - விவசாயிகள் ஆனந்த கண்ணீர் - farmers happy'

திருவாரூர்: காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு உத்தரவிட்டதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

விவசாயி
author img

By

Published : Jul 10, 2019, 1:30 PM IST

தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் நெல் உற்பத்தி செய்யும் மாவட்டம் திருவாரூர். மூன்றுபோகம் விளையும் அளவிற்கு செழிப்பு நிறைந்த மாவட்டம் தற்போது ஒரு போகம் விளைவிக்க கூட நீர் இல்லாமல் வறட்சியின் பிடியுல் உள்ளது. ஆண்டுதோறும் காவிரியிலிருந்து உரிய நேரத்தில் தண்ணீரை பெற விவசாயிகள் போராடி வருகின்றனர். ஜூன், ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக மாநிலத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

விவசாயி
விவசாயி

ஆனால், அணைகளில் போதிய நீர் இல்லாததையும், மழை இல்லாததையும் காரணம் காட்டி கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுத்துவிட்டது. இந்நிலையில் மாண்டியா மாவட்ட விவசாயிகள் தண்ணீர் திறக்கக் கோரி கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மாண்டியா மாவட்ட விவசாயிகளுக்கும், தமிழ்நாட்டிற்கும் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்துமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்த முடிவு தமிழ்நாடு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், காலம் கடந்து விட்டதால் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாது. எனவே ஒருபோகம் சம்பா சாகுபடி மேற்கொள்ள, இந்த தண்ணீரை தமிழ்நாடு அரசு சேகரித்து வைத்து திறந்துவிட வேண்டும்.

குறுகிய கால விதை நெல் மற்றும் இடுபொருட்களை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:

Body:தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு உத்தரவிட்டதற்கு டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதோடு, ஒரு போக சம்பா சாகுபடி செய்வதற்கு மானிய விலையில் குறுகிய கால விதை நெல் வழங்கவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் நெல் உற்பத்தி செய்யும் மாவட்டம் திருவாரூர் மாவட்டம். முப்போகம் விளைந்த நிலையில் தற்போது ஒரு போகம் விளைவிக்க கூட நீர் இல்லாமல் வறட்சியின் பிடியுல் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் காவிரியிலிருந்து உரிய நேரத்தில் தண்ணீரை பெற விவசாயிகள் போராடி வருகின்றனர். ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக மாநிலத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அணைகளில் போதிய நீர் இல்லாததையும், மழை இல்லாததையும் காரணம் காட்டி கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில் மாண்டிய மாவட்ட விவசாயிகள் தண்ணீர் திறக்க கோரி கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் மாண்டிய மாவட்ட விவசாயிகளுக்கும், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்துமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்த முடிவு தமிழக விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதிலும் தற்போது குறுவை சாகுபடி என்பது ஆண்டுகளாக பொய்த்து உள்ளது. தற்போது குறுவை சாகுடி செய்ய தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் தயார் நிலையில் இல்லை, காலம் கடந்து விட்டதால் இப்போது குறுவை சாகுபடி என்பது மேற்கொள்ள முடியாது.

எனவே ஒருபோகம் சம்பா சாகுபடி மேற்கொள்ள வரக்கூடிய தண்ணீரை தமிழக அரசு சேகரித்து வைத்து ஒரு போகம் விளைவிக்க திறந்துவிட வேண்டும்.

மேலும் இந்த நீர் மேலும் குறுகிய கால விதை நெல் மற்றும் இடுபொருட்களை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே வரக்கூடிய நடந்து ஒரு போக சம்பா சாகுபடியாவது விவசாயிகள் மேற்கொள்ள முடியும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

பேட்டி-
இடும்பையன்
காமராஜ்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.