பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக குடியேறுபவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று பாரதிய ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.
அதை நிறைவேற்றும் வகையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை உருவாக்கியுள்ளது. இச்சட்டமானது இஸ்லாமியர்கள் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்படும் என பாரதிய ஜனதா மதரீதியாக செயல்படுவதாகக் கூறி பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நகல் எரிப்புப் போராட்டம்