திருவாரூர்: தமிழ்நாட்டில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று (நவ.23) திருவாரூர் மாவட்டம் காவனூர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை ஒன்றிய உள்துறை இணை செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.(Central Team Visit)
அப்போது விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: திரிபுரா வன்முறை; பாஜகவிற்கு எதிராக விசிக கண்டன ஆர்ப்பாட்டம்