ETV Bharat / state

பாதைகேட்டு சடலத்துடன் திடீர் சாலைமறியல் !

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே சுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் சடலத்துடன் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Thiruvarur to Thiruthuraipoondi
cemetery road problem
author img

By

Published : Dec 3, 2019, 1:49 PM IST

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆப்பரகுடி கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதி மக்கள் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு தங்கள் பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் வயல் வெளியின் நடுவில் அமைந்துள்ள சுடுகாட்டை பயன்படுத்தி வருகின்றனர்.

சுடுகாட்டுக்கு செல்வதற்கு முறையான பாதை இல்லாததால் குறுகிய வரப்பை கடந்து தான் மயானத்திற்கு சென்று வருகின்றனர். மேலும் மழை காலங்களில் சடலத்தை வயல் வழியே கொண்டு செல்ல முடியாமல் இறந்தவரின் உடலை தூக்கி செல்பவர்கள் சடலத்துடன் தடுமாறி கீழே விழும் அவல நிலையும் ஏற்பட்டுவருகிறது.

சடலத்துடன் சாலை மறியல் போராட்டம்.

மேலும் இந்த சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தரக்கோரி பல முறை கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறும் பொதுமக்கள் இன்று உயிரிழந்த ஒருவரின் சடத்தை வயல்வெளியில் கொண்டு செல்ல முடியாமல் சிரமபட்ட உறவினர்கள் சடலத்துடன் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனால் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி சுடுகாடு செல்வதற்கு சாலை அமைத்து தர ஒப்புக் கொண்டதையடுத்து சாலைமறியலை கைவிட்டு சடலத்தை கொண்டு சென்றனர்.

சீனிவாசன் - ஆப்பரகுடி கிராமம்

இதையும் படிக்க: வேளாண்மை மாணவர்கள் விவசாயிகளுக்கு நேரடி தொழில்நுட்ப செய்முறை வழிகாட்டல்!

Intro:Body:திருத்துறைப்பூண்டி அருகே சுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் சடலத்துடன் தீடிர் சாலை மறியல் ஈடுபட்ட உறவினர்களால் பரபரப்பு.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆப்பரகுடி கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதி மக்கள் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு தங்கள் பகுதியில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் வயல் வெளியில் அமைந்துள்ள சுடுகாட்டை பயன்படுத்தி வருகின்றனர். வயல்வெளியின் நடுவே அமைந்துள்ள சுடுகாட்டுக்கு செல்வதற்கு முறையான பாதை வசதி இல்லாததால் குறுகிய வரப்பை கடந்து தான் மயானத்திற்கு சென்று வருகின்றனர். மேலும் மழை காலங்களில் சடலத்தை வயல் வழியே கொண்டு செல்ல முடியாமல் இறந்தவரின் உடலை தூக்கி செல்பவர்களும் சடலத்துடன் தடுமாறி கீழே விழும் அவல நிலையும் ஏற்பட்டுவருகிறது. மேலும் இந்த சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தரக்கோரி பல முறை கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறும் பொதுமக்கள் இன்று இயற்கை மரணமடைந்த ஒருவரை தற்போது மழை காரணமாக வயல்வெளியில் கொண்ட செல்ல முடியாமல் சிரமபட்ட உறவினர்கள்
சடலத்துடன் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் தீடிர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து வட்டாட்சியர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி சுடுகாடு செல்வதற்கு சாலை அமைத்து தர ஒப்புக் கொண்டதையடுத்து சாலை மறியலை கைவிட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து உறவினர்கள் சடலத்தை சம்பா சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலின் வழியே கொண்டு சென்று உடலை அடக்கம் செய்தனர்.

பேட்டி : சீனிவாசன்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.