ETV Bharat / state

நான்கே நாள்களில் கடைமடைக்கு வந்த காவிரி நீர் - Cauvery water open the dam

திருவாரூர்: கல்லணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் நான்கு நாள்களில் கடைமடைக்கு வந்தடைந்துள்ளது என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

kamaraj
kamaraj
author img

By

Published : Jun 22, 2020, 6:30 PM IST

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதிக்கு வந்த காவிரி நீரை அமைச்சர் காமராஜ் மலர் தூவி வரவேற்றார். பின்பு ஜாம்புவானோடை பாசனப் பகுதிக்கு விவசாயத்திற்காக மதகு அணையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், பொதுப்பணித்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 12ஆம் தேதி டெல்டா மாவட்ட விவசாயத்திற்காக முதலமைச்சரால் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. 16ஆம் தேதி கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு நான்கு நாள்களில் கடைமடை பகுதியான திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு தண்ணீர் சென்றடைந்து விட்டது.

இந்த ஆண்டு 306 நாள்கள் மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தது வரலாறு. அதேபோல் இந்த ஆண்டு 24 லட்சத்து 70 ஆயிரத்து மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

மேலும், கரோனா பாதிப்பை அரசு குறைத்து கூறுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதற்கு, கரோனா பாதிப்பைக் குறைத்து கூறுவதால் எங்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிடையாது. கூடுதலாக கூறுவதால் அவருக்கும் எந்தவித நன்மையும் கிடையாது. யதார்த்தத்தையும் உண்மையையும் பேசக்கூடியவர்தான் முதலமைச்சர் எனக் கூறினார்.

இதையும் படிங்க: மக்களைப் பாதிக்கும் நடவடிக்கைகளை ரயில்வே துறை கைவிட வேண்டும் - வைகோ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.