ETV Bharat / state

கோடையில் பறவையினங்களைக் காப்போருக்கு 'பறவை மனிதர்' விருது

தஞ்சாவூர்: கோடைகாலத்தில் நீரின்றி தவிக்கும் பறவையினங்களைக் காக்கும்விதமாக மாடியிலோ, தோட்டத்திலோ சிறப்பாக நீர்த்தொட்டி அமைத்து பராமரிப்பவர்களுக்கு 'பறவை மனிதர்' விருது வழங்கப்படும் என 'நம்ம தஞ்சாவூர் ' என்னும் அமைப்பு அறிவித்துள்ளது.

thanjavur
thanjavur
author img

By

Published : Mar 1, 2020, 10:06 AM IST

தஞ்சாவூர் மாவட்டத்தில் 'நம்ம தஞ்சாவூர்' அமைப்பு ஒன்று இயங்கிவருகிறது. அதில் காவிரிக் கரையோரங்களில் மரம் நடுதல், பறவைகள் காத்தல், ஆதரவற்ற விளையாட்டு வீரர்கள், குழந்தைகளுக்கு நிதி திரட்டுவது உள்ளிட்ட சமூகம் சார்ந்த பணிகள் செய்யப்பட்டுவருகின்றன.

அதன்படி, அந்த அமைப்பு இந்தாண்டு கோடைகாலத்தின் விளைவாக ஏரி குளங்கள் வற்றிவிடுவதால் பறவையினங்கள் நீரின்றி தவிக்கும் சூழல் ஏற்படும் என்பதால் அதனைத் தடுக்கும்விதமாகப் பறவைகளுக்கு உணவு, நீர் அளிப்பதற்கு ஊக்குவிக்கும் வகையில் வீட்டு மாடியிலோ, தோட்டத்திலோ, ஏதேனும் இடத்திலோ நீர்த்தொட்டி அமைத்து அதைச் சிறப்பாகப் பராமரிக்கும் 30 பேருக்கு 'பறவை மனிதர்' விருது வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

நீர்த்தொட்டி அமைத்து மார்ச் 01 (இன்று) முதல் மே 29 வரை அதனைhd பராமரிக்க வேண்டும். அதனை மூன்று நாளுக்கு ஒருமுறை காணொலி பதிவுசெய்து, காண்பிக்க வேண்டும். அதில் சிறப்பாகச் செயல்படும் 30 நபர்களுக்கு 'பறவை மனிதர்' விருது வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தனுஷ்கோடியில் குவிந்துள்ள 7 ஆயிரம் பிளமிங்கோ பறவைகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.