திருவாரூர் மாவட்டம் புள்ளவராயன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. இவர் தனது 19ஆவது வயதிலேயே இந்திய ராணுவத்தில் பணிக்குச் சேர்ந்தார். இவர் கடந்த 30 வருடங்களாகத் தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், எல்லைப் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், திருமூர்த்தி கடந்த 26ஆம் தேதி நள்ளிரவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவரது தலையில் குண்டு பாய்ந்து வீரமரணம் அடைந்தார். இதனையறிந்த அவரது குடும்பத்தினர் பெரும் துயரத்தில் ஆழ்ந்தனர்.
மத்திய, மாநில அரசுகள் விரைவில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் திருமூர்த்திக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இதையும் படிங்க: கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணியால் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்